MARC காட்சி

Back
அருள்மிகு அழகதேவர் திருக்கோயில்
245 : _ _ |a அருள்மிகு அழகதேவர் திருக்கோயில் -
246 : _ _ |a குலதெய்வக் கோயில்
520 : _ _ |a மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள சொரிக்காம்பட்டி ஊரில் சல்லிக்கட்டு வீரர் ஒருவருக்கு கோயில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 400 ஆண்டுகள் பழமையானது. மதுரை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆண்டுதோறும் தைமாதம் பொங்கல் திருவிழாவின் போது சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் விளையாட்டு வீரர்களிடையே நடைபெறும்.அந்நாளில் 400 ஆண்டுகளுக்கு முன் மாடுபிடி சண்டையில் உயிரிழந்த வீரர் அழகதேவர் என்பவருக்கு கருப்பையாத் தேவர் வகையறாவினரால் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சல்லிக்கட்டு வீரர்கள் தங்கள் வெற்றி வேண்டி வழிபாடு செய்கின்றனர்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நடுகல் வழிபாடு, காவல் தெய்வங்கள், வீரவழிபாடு, தமிழ் பண்பாடு, தமிழர் பண்பாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு, அழகதேவர் கோயில், சொரிக்காம்பட்டி, திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம், சிறுதெய்வக் கோயில்
700 : _ _ |a அழகுபாண்டி, ஸ்ரீவாணிதாசன், Deity Cap
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பொ.ஆ.1600
909 : _ _ |a 5
910 : _ _ |a 400 ஆண்டுகள் பழமையானது. வீரர் வழிபாட்டுக்குரிய கோயில்.
914 : _ _ |a 9.8980131
915 : _ _ |a 77.9517522
923 : _ _ |a சொரிக்காம்பட்டி கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a பொங்கல், சல்லிக்கட்டு
927 : _ _ |a இக்கோயிலில் தற்காலத்தில் வெட்டப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இரு கல்வெட்டுகளும் தோரண வாயிலின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. பொ.ஆ.2002-இல் இக்கோயில் கட்டப்பட்டதை தெரிவிக்கும் ஒரு கல்வெட்டும், பொ.ஆ.2011-இல் இக்கோயிலுக்கு தோரணவாயில் அமைத்துக் கொடுத்தவர் விபரம் கூறும் மற்றொரு கல்வெட்டும் இங்குள்ளன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கோயிலின் நுழைவில் அமைக்கப்பட்டுள்ள தோரண வாயிலின் மேற்பகுதியில் காளை மாட்டின் திமிலைப் பிடித்தபடி, திமிறும் மாட்டை அடக்கும் முகமாக அழகதேவர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மாட்டின் வாலைப் பிடித்தபடி மற்றொரு வீரர் நிற்கிறார். இருவருடைய ஆடையும், தோற்றமும் பண்டைய தமிழ்மரபை, பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. இச்சிற்பத்தின் இருபுறமும் காளம் என்னும் இசைக்கருவியை ஊதியபடி இரு வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். கருவறையில் உள்ள அழகதேவர் சிற்பம் கல்லால் ஆனது. இச்சிற்பமும் அழகதேவர் ஏறுதழுவிய நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.
930 : _ _ |a சொரிக்காம்பட்டி ஊராட்சி மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. சொரிக்காம்பட்டியில் 400 ஆண்டுகளுக்கு முன் சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் விளையாட்டில் வீரமுடன் உயிரிழந்த அழகதேவர் என்னும் வீரருக்கு கோயில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. அழகதேவர் என்னும் மாடுபிடி வீரர் கோயில் வழிபாட்டில் உள்ளது. மாடுபிடி வீரர்கள் தங்கள் வெற்றியை வேண்டி இக்கோயிலுக்குச் சென்று வழிபடுவது மரபு.
932 : _ _ |a இக்கோயில் மிக உயர்ந்த தோரணவாயிலோடு நம்மை வரவேற்கிறது. வாயிலைத் தாண்டி இரும்பினாலான கதவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சற்று உள்ளே தள்ளி கோயில் அமைந்துள்ளது. கோயில் பசுமையான மரங்களின் நடுவே ஒரு மண்டபம் போன்ற அமைப்பில் உள்ளது. தூண்களோடு கூடிய மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கருவறையில் மாடுபிடி வீரர்களின் தெய்வமான அழகதேவரின் சிற்பம் வழிபாட்டில் உள்ளது.
933 : _ _ |a கருத்தமாயத்தேவர் வகையறா
934 : _ _ |a இராக்கம்மாள் அம்மன் கோயில், கருப்பசாமி கோயில், முனியாண்டி கோயில்
935 : _ _ |a மதுரையிலிருந்து பேருந்தில் திருமங்கலம் சென்று அங்கிருந்து சொரிக்காம்பட்டி செல்லலாம்.
936 : _ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
937 : _ _ |a சொரிக்காம்பட்டி
938 : _ _ |a திருமங்கலம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00394
barcode : TVA_TEM_00394
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00394/TVA_TEM_00394_மதுரை_சொரிக்காம்பட்டி_அருள்மிகு-அழகதேவர்-திருக்கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00394/TVA_TEM_00394_மதுரை_சொரிக்காம்பட்டி_அருள்மிகு-அழகதேவர்-திருக்கோயில்-0001.jpg

TVA_TEM_00394/TVA_TEM_00394_மதுரை_சொரிக்காம்பட்டி_அருள்மிகு-அழகதேவர்-திருக்கோயில்-0002.jpg

TVA_TEM_00394/TVA_TEM_00394_மதுரை_சொரிக்காம்பட்டி_அருள்மிகு-அழகதேவர்-திருக்கோயில்-0003.jpg

TVA_TEM_00394/TVA_TEM_00394_மதுரை_சொரிக்காம்பட்டி_அருள்மிகு-அழகதேவர்-திருக்கோயில்-0004.jpg

TVA_TEM_00394/TVA_TEM_00394_மதுரை_சொரிக்காம்பட்டி_அருள்மிகு-அழகதேவர்-திருக்கோயில்-0005.jpg

TVA_TEM_00394/TVA_TEM_00394_மதுரை_சொரிக்காம்பட்டி_அருள்மிகு-அழகதேவர்-திருக்கோயில்-0006.jpg